Skip to content

Birthright பற்றிய பைபிள் வசனங்கள்

13 வசனங்கள் · 6 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. ஒரு நாள் யாக்கோபு கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, ஏசா காட்டு வெளியிலிருந்து மிகவும் களைத்தவனாக வந்தான்.

  2. அப்பொழுது அவன் யாக்கோபிடம், “நான் களைத்துப் போயிருக்கிறேன்! சீக்கிரமாய் அந்தச் சிவப்புக் கூழில் எனக்குக் கொஞ்சம் தா!” என்று கேட்டான். அதினாலேயே ஏசாவுக்கு ஏதோம் என்கிற பெயர் உண்டாயிற்று.

  3. யாக்கோபோ அவனிடம், “நீ முதலில் உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை எனக்கு விற்று விடு” என்றான்.

  4. அதற்கு ஏசா, “என்னைப் பார், நான் சாகப்போகிறேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான்.

  5. ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான்.

  6. அதன்பின் யாக்கோபு ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், பயற்றங்கூழும் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படியாக ஏசா தனக்குரிய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை உதாசீனம் செய்தான்.

  7. ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, ஒருத்தியில் அன்பு செலுத்தி, மற்றவளில் அன்பு செலுத்தாமல் இருக்கும்போது, இருவரும் அவனுக்கு மகன்களைப் பெற்றிருக்கையில், அவன் அன்பு செலுத்தாதவளின் மகன் மூத்த பிள்ளையாக இருக்கக்கூடும்.

  8. அப்படியிருந்தால் தகப்பன் தன் சொத்தை மகன்களுக்குப் பிரித்துக்கொடுக்கும்போது, தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனான மூத்த பிள்ளை இருக்க, முதற்பேறான மகனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமையைத்தான் அன்பு செலுத்திய மனைவியின் மகனுக்குக் கொடுக்கக்கூடாது.

  9. ஆனால் தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனுக்குத் தன் சொத்தில் மற்றவனுக்குக் கொடுப்பதைப்போல் இரண்டு மடங்கு கொடுத்து, அவனைத் தன் மூத்த பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த மகனே தன் தகப்பனின் வல்லமையின் முன் அடையாளமானவன். முதற்பேறானவனின் உரிமை அவனுக்கே உரியதாகும்.

  10. இஸ்ரயேலின் முதற்பேறான மகன் ரூபன். இவன் தன் தகப்பனின் திருமணப்படுக்கையைக் கறைப்படுத்தினபடியினால், அவனுடைய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது. எனவே உரிமையின்படி இவன் வம்ச அட்டவணையில் முதற்பேறானவனாக இடம்பெறவில்லை.

  11. யூதா தன் சகோதரரில் வலிமையுடையவனாய் இருந்தும், ஆளுநர் ஒருவனும் அவனிலிருந்து தோன்றியும் யோசேப்பிற்கே மூத்த மகனுக்குரிய பிறப்புரிமை கொடுக்கப்பட்டது.

  12. அது செயல்களினால் அல்ல, அழைப்பவரின் அடிப்படையிலே இருக்கவேண்டும் என்பதே. இதனால்தான், “மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்” என்று ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டது.

  13. அதனால்தான், “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” என்று எழுதப்பட்டது.