Answers To Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Offer unworthy service to God
Offer unworthy service to God பற்றிய வசனங்கள்
என் பலிபீடத்தின்மேல் அசுத்தமான காணிக்கைகளை வைக்கிறீர்கள். ஆயினும், “உம்மை எப்படி கறைபடுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். யெகோவாவின் மேஜை மதிப்புக்குரியது என்று நீங்கள் எண்ணாததினாலேயே அப்படிச் செய்கிறீர்கள்.
நீங்கள் குருடான மிருகங்களை பலிக்காகக் கொண்டு வருகிறீர்களே, அது தவறில்லையா? ஊனமானதும் நோயுற்றதுமான மிருகங்களைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உங்கள் ஆளுநருக்குக் கொடுத்துப் பாருங்கள். உங்களிடம் அவன் பிரியமாய் இருப்பானோ? அல்லது உங்களை அவன் ஏற்றுக்கொள்வானோ? என சேனைகளின் யெகோவா கேட்கிறார்.
“அப்படியிருந்தும் இப்போது உங்களில் கிருபையாய் இருக்கும்படி, இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறீர்கள். உங்கள் கைகளில் இப்படியான காணிக்கைகளை அவரிடம் கொண்டுவந்தால், ஏன் அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்?” என சேனைகளின் யெகோவா கேட்கிறார்.