Sharon
இவ்வாறும் அறியப்படுகிறார்: Saron
32.6300, 34.9400 கூகுள் வரைபடத்தில் காண்க
Sharon பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.
நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன்.
நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது, லெபனோன் வெட்கப்பட்டு வாடுகிறது. சாரோன் சமவெளி வனாந்திரத்தைப் போலிருக்கிறது, பாசானும், கர்மேலும் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
அது வளமாய் வளர்ந்து மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும். லெபனோனின் மகிமையும், கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும். யெகோவாவின் மகிமையையும், நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.
என்னைத் தேடும் என் மக்களுக்கு சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள்.