உள்ளடக்கத்திற்குச் செல்க

Jehoahaz

8 வசனங்கள் · 5 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Shallum

Jehoahaz பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. யோசியாவின் அதிகாரிகள் அவனுடைய உடலை தேரில் ஏற்றி மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அதை அவனுடைய சொந்தக் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அந்த நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவாகாஸை அபிஷேகம்பண்ணி, அவனுடைய தகப்பனின் இடத்தில் அவனை அரசனாக்கினார்கள்.

  2. யூதாவுக்கு யோவாகாஸ் அரசனாக வந்தபோது இருபத்தி மூன்று வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். இவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள்.

  3. பார்வோன் நேகோ, யோசியாவின் மகனும், யோவாகாசின் சகோதரனுமான எலியாக்கீமை அரசனாக்கி அவனுடைய பெயரையும் யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால் யோவாகாஸை எகிப்திற்குக் கொண்டுபோனான். அங்கே அவன் இறந்தான்.

  4. யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாவது மகன் யோயாக்கீம், மூன்றாவது மகன் சிதேக்கியா. நான்காவது மகன் சல்லூம்.

  5. நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவனுடைய தகப்பனின் இடத்திலே அரசனாக்கினார்கள்.

  6. யோவகாஸ் அரசனானபோது அவனுக்கு இருபத்துமூன்று வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசாண்டான்.

  7. யோவகாஸின் சகோதரன் எலியாக்கீமை எகிப்தின் அரசன், யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான். எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என மாற்றினான். ஆனால் நேகோ எலியாக்கீமின் சகோதரன் யோவாகாஸை எகிப்திற்குக் கொண்டுபோனான்.

  8. யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான்.