உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  2. ஏனெனில், “பலிபீடத்தின் அர்ப்பணிப்பிற்காக ஒரு நாளைக்கு ஒரு தலைவனாக தன் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும்” என்று யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தார்.

  3. மோசே யெகோவாவுடன் பேசுவதற்காகச் சபைக் கூடாரத்திற்குள் சென்றபோது, சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்திற்கு மேலாக இருக்கும், இரண்டு கேருபீன்களுக்கும் இடையில் இருந்து தன்னோடு பேசுகிற குரலைக் கேட்டான். இவ்விதமாக யெகோவா மோசேயோடு பேசினார்.

  4. யெகோவா மோசேயிடம்,

  5. ஆரோனும் அப்படியே செய்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் விளக்குத்தாங்கியின் விளக்குகளின் முன்பக்கம் பார்க்கும்படி அவற்றை வைத்தான்.

  6. அந்த குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்த விதமாவது: அதன் அடிப்பாகத்திலிருந்து நுனியிலுள்ள பூக்கள்வரை அது அடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. யெகோவா மோசேக்குக் காட்டிய குத்துவிளக்கின் வடிவத்தைப் போலவே அது செய்யப்பட்டிருந்தது.

  7. திரும்பவும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  8. நீ லேவியரை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். இஸ்ரயேலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைக்கவேண்டும்.

  9. ஆரோன், லேவியரை இஸ்ரயேலரின் அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அவர்கள் யெகோவாவின் வேலையைச் செய்வதற்கு ஆயத்த மாவார்கள்.

  10. “லேவியர் அக்காளைகளின் தலையில் தங்கள் கைகளை வைக்கவேண்டும். அதன்பின் ஒரு காளையைப் பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தி, இன்னொன்றை லேவியருக்கான பாவநிவிர்த்தி செய்யும்படி, தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.

  11. ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் முன்பாக லேவியரை நிறுத்தி, யெகோவாவுக்கு அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.

  12. முழுவதுமாக எனக்காகக் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர் அவர்களே. ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்ணும் பெற்றெடுக்கும் முதற்பேறான ஆண் பிள்ளைகளுக்குப் பதிலாக நான் லேவியர்களை எனக்குச் சொந்தமாக எடுத்துக்கொண்டேன்.

  13. இஸ்ரயேலின் முதற்பேறான ஒவ்வொரு ஆணும் எனக்குரியவன். மனிதனின் முதற்பேறும், மிருகத்தின் தலையீற்றும் எனக்குரியவை. எகிப்தில் முதற்பேறானவற்றையெல்லாம் நான் அழித்தபோது, அவர்களை எனக்காக நான் வேறுபிரித்தேன்.

  14. எனவே நான் இஸ்ரயேலரின் முதற்பேறான எல்லா ஆண்களுக்கும் பதிலாக இப்பொழுது லேவியரை தெரிந்துகொண்டேன்.

  15. இஸ்ரயேலர் எல்லோருக்குள்ளும் இருந்து நான் லேவியரை பிரித்தெடுத்து, அவர்களை ஆரோனுக்கும், அவனுடைய மகன்களுக்கும் கொடைகளாகக் கொடுத்திருக்கிறேன். லேவியர் இஸ்ரயேலரின் சார்பாக சபைக் கூடாரத்தில் வேலை செய்வதற்காகவும், இஸ்ரயேலர் பரிசுத்த இடத்திற்கு அருகே போகும்போது, அவர்கள் கொள்ளைநோயினால் வாதிக்கப்படாதபடி, அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காகவுமே கொடுத்திருக்கிறேன்” என்றார்.

  16. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும், முழு இஸ்ரயேலின் சமுதாயமும் லேவியருக்கு எல்லாவற்றையும் செய்தார்கள்.

  17. லேவியரும் தங்களைச் சுத்திகரித்துத் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் ஆரோன் அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.

  18. அதன்பின் லேவியர் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய மேற்பார்வையின்கீழ், சபைக் கூடாரத்தில் தங்கள் வேலையை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தார்கள்.

  19. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  20. இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில், யெகோவா சீனாய் பாலைவனத்தில் மோசேயுடன் பேசினார். அவர் அவனிடம்,

  21. அவ்வாறே அவர்கள், முதலாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் நேரத்தில், சீனாய் பாலைவனத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள்.

  22. அவர்கள் மோசேயிடம், “ஒரு பிரேதத்தைத் தொட்டதினால் நாங்கள் அசுத்தமாகிவிட்டோம். மற்ற இஸ்ரயேலரோடு குறிப்பிட்ட காலத்தில் யெகோவாவுக்குக் காணிக்கையைக் கொடுப்பதிலிருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பதால் என்ன செய்யவேண்டும்?” எனக் கேட்டார்கள்.

  23. அதற்கு மோசே, “உங்களைப்பற்றி யெகோவா என்ன கட்டளை கொடுக்கிறார் என நான் அவரிடமிருந்து அறிந்து வரும்வரை பொறுத்திருங்கள்” என்றான்.

  24. அப்பொழுது யெகோவா மோசேயிடம்,

  25. “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘உங்களிலோ அல்லது உங்கள் சந்ததியிலோ, யாராவது பிரேதத்தைத் தொட்டு அசுத்தமாயிருந்தாலும் அல்லது பயணம் போயிருந்தாலும், அவர்கள் யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாடலாம்.