Skip to content

Deborah

9 வசனங்கள் · 1 குடும்ப உறுப்பினர்

Deborah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அக்காலத்தில் லபிதோத்தின் மனைவி தெபோராள் இறைவாக்கினளாக இருந்தாள். அவளே இஸ்ரயேலரை நீதி விசாரித்து வந்தாள்.

  2. எப்பிராயீம் மலையில் ராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் தெபோராளின் பேரீச்ச மரத்தின்கீழ் அவள் நீதிமன்றத்தைக் கூட்டுவாள். இஸ்ரயேலர் தமது வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள அங்கே அவளிடம் வருவார்கள்.

  3. அதற்கு தெபோராள், “சரி; நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் இவ்விதம் நீ போவதானால் அந்தப் புகழ் உன்னுடையதாயிராது. யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றாள். அதன்பின் தெபோராள் பாராக்குடன் கேதேஸுக்குப் போனாள்.

  4. அங்கே பாராக் செபுலோனியரையும், நப்தலியினரையும் கேதேஸுக்கு வரவழைத்தான். அப்பொழுது பத்தாயிரம் ஆண்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடன் தெபோராளும் சென்றாள்.

  5. தெபோராள் பாராக்கிடம், “நீ போ! இதுவே சிசெராவை யெகோவா உன் கையில் தரும் நாள், உனக்கு முன்னே யெகோவா போகவில்லையா?” என்றாள். எனவே பாராக்கும் அவனுடனிருந்த பத்தாயிரம் போர்வீரர்களும் தாபோர் மலையை விட்டு கீழே இறங்கினார்கள்.

  6. அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:

  7. இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று. தெபோராளாகிய நான் இஸ்ரயேலில் தாயாக எழும்பும்வரை அது நின்றுபோயிற்று.

  8. விழித்தெழு, விழித்தெழு தெபோராளே! விழித்தெழுந்து பாட்டுப்பாடு. பாராக்கே எழுந்திரு! அபினோமின் மகனே உன்னை சிறைப்பிடித்தவர்களைச் சிறைபிடி.

  9. இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடு இருந்தார்கள். ஆம்! இசக்கார் கோத்திரத்தார் பாராக்கின் பின்னே பள்ளத்தாக்கில் விரைந்து சென்றார்கள். ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் இருதயத்தை ஆராய்ந்தார்கள்.