உள்ளடக்கத்திற்குச் செல்க

Ahasuerus

29 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Ahasuerus பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. மொர்தெகாய் அகாஸ்வேருவின் அரசின் நூற்றிருபத்தேழு மாகாணங்களிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் நல்லெண்ணத்தையும், நிச்சயத்தையும் தெரிவிக்கும் கடிதங்களை அனுப்பினான்.

  2. அகாஸ்வேரு அரசன் அவனுடைய பேரரசு எங்கும், அதன் தூரமான எல்லைகள் வரைக்கும் வரி விதித்தான்.

  3. யூதனான மொர்தெகாய் மேன்மையில் அரசனுக்கு அடுத்ததாய் இருந்தான். அவன் தனது மக்களின் நலனுக்காக உழைத்ததினாலும், எல்லா யூதர்களுடைய முன்னேற்றத்துக்காகப் பேசியதினாலும் அவன் யூதர்கள் மத்தியிலும் முதன்மை பெற்றவனாயிருந்தான். அவன் தன் சகோதரரான மற்ற யூதர்களினால் உயர்வாய் மதிக்கப்பட்டவனுமாயிருந்தான்.

  4. இது மேதியரின் சந்ததியான அகாஸ்வேருவின் மகன் தரியு, பாபிலோனியரின் அரசின்மேல் ஆளுநர் ஆக்கப்பட்ட வருடமாயிருந்தது.