எண்ணாகமம் 32:36
சுற்றியுள்ள சூழலுடன் வசனம் 36 காட்டப்படுகிறது.
33
எனவே மோசே, காத்தியருக்கும் ரூபனியருக்கும் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் அரைக்கோத்திரத்திற்கும், எமோரியரின் அரசன் சீகோனின் அரசையும், பாசானின் அரசன் ஓகின் அரசையும் கொடுத்தான். பட்டணங்களோடும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளோடும் முழு நாட்டையும் அவர்களுக்கே கொடுத்தான்.
34
காத்தியரோ தீபோன், அதரோத், அரோயேர் பட்டணங்களையும்
35
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபெயா,
36
பெத் நிம்ரா, பெத்தாரன் ஆகிய அரணான பட்டணங்களையும் கட்டினார்கள். தங்கள் மந்தைகளுக்கு தொழுவங்களையும் அமைத்தார்கள்.
37
ரூபனியர் எஸ்போன், எலெயாலே, கீரியாத்தாயீம் பட்டணங்களைத் திரும்பக்கட்டினார்கள்.
38
நேபோ, பாகால் மெயோன் பட்டணங்களையும் கட்டினார்கள். அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டன. சிப்மா பட்டணத்தையும் கட்டினார்கள். அவர்கள் தாங்கள் திரும்பக்கட்டிய பட்டணங்களுக்கு வேறு பெயர்களை வைத்தார்கள்.
39
மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததிகள் கீலேயாத்திற்குப்போய், அதைக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள்.
Settings