உள்ளடக்கத்திற்குச் செல்க
எரேமியா 8:8-12

பொய்யான ஞானத்தின் மூடத்தனம்

எரேமியா 8:8-12
8
“ ‘எழுத்தாளனின் பொய்யான எழுதுகோல், உண்மையல்லாததைத் தவறாகக் கையாண்டிருக்கும்போது, “நாங்கள் ஞானிகள்; யெகோவாவின் சட்டம் எங்களிடம் இருக்கிறது” என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?
9
ஞானிகள் வெட்கத்துக்குள்ளாவார்கள். அவர்கள் மனங்குழம்பி பொறியில் அகப்படுவார்கள். யெகோவாவின் வார்த்தையைப் புறக்கணித்தவர்களிடம் எப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது?
10
ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன். அவர்கள் வயல்களையும் புதியவர்களுக்குச் சொந்தமாக்குவேன். தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள்.
11
என் மகளாகிய மக்களின் கடுமையான காயத்தை, கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். “சமாதானம், சமாதானம்” என்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானமோ அங்கே இல்லை.
12
அவர்கள் தங்கள் அருவருப்பான நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா? இல்லை, சிறிதளவும் வெட்கமில்லை. நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். ஆகவே அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள். அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தள்ளுண்டு போவார்கள் என்று யெகோவா கூறுகிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options