Skip to content
எரேமியா 33:14-22

எரேமியா 33:14-22

14
இஸ்ரயேல் குடும்பத்திற்கும், யூதா குடும்பத்திற்கும் நான் கொடுத்த கிருபையான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார்.
15
“ ‘அந்த நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதின் சந்ததியிலிருந்து ஒரு நேர்மையான கிளை முளைக்கும்படி செய்வேன். அவர் நாட்டில் நீதியானதையும், நியாயமானதையும் செய்வார்.
16
அந்நாட்களில் யூதா காப்பாற்றப்படும். எருசலேம் பாதுகாப்புடன் வாழும். அது யெகோவாவே நமது நேர்மை என்ற பெயரால் அழைக்கப்படும்.’
17
ஏனெனில் யெகோவா கூறுவது இதுவே: ‘இஸ்ரயேல் குடும்பத்தின் அரியணையில் இருக்க தாவீதுக்கு ஒருவனாவது இல்லாமல் போவதில்லை.
18
லேவியரான ஆசாரியர்களில் எனக்கு முன்பாக நின்று தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், மற்ற பலிகளையும் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒருவனாவது இல்லாமல் போவதும் இல்லை’ ” என்கிறார்.
19
யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
20
யெகோவா சொல்வது இதுவே: “பகலும் இரவும் அவற்றிற்கென குறிக்கப்பட்ட காலத்தில் இனிமேல் வராதபடிக்கு, நான் அவைகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உங்களால் உடைக்க முடியுமானால்,
21
அப்பொழுது என் தாசனாகிய தாவீதுடனும், எனக்கு முன்பாக ஊழியம் செய்யும் லேவிய ஆசாரியருடனும் நான் செய்துகொண்ட உடன்படிக்கையையும் உடைக்க முடியும். தாவீதுக்கும் தன் அரியணையில் இருந்து ஆட்சிசெய்ய ஒரு சந்ததி இல்லாது போகும்.
22
நான் என் தாசனாகிய தாவீதின் வம்சத்தையும், எனக்கு முன்பாக ஊழியம் செய்கிற லேவியரையும் வானத்திலுள்ள எண்ணமுடியாத நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையின் அளவற்ற மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன் என்கிறார்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options