உள்ளடக்கத்திற்குச் செல்க
எசேக்கியேல் 30:1-9

எகிப்துக்கு எதிரான ஆண்டவருடைய நாள்

எசேக்கியேல் 30:1-9
1
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2
“மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘ஆபத்தான அந்த நாள் வருகிறது “என அலறிச் சொல்லுங்கள்!”
3
அந்த நாள், சமீபமாயுள்ளது. யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. அது ஒரு இருள்சூழ்ந்த நாள்; பல நாடுகளுக்கும் அது அழிவின் காலம்.
4
எகிப்திற்கு விரோதமாக வாள் ஒன்று வரும், எத்தியோப்பியரின்மீது வேதனைகள் பெருகும். எகிப்திலே கொல்லப்படுவோர் விழும்போது அதனுடைய செல்வம் எடுத்துக்கொண்டு போகப்படும். அதனுடைய அஸ்திபாரங்களும் இடிக்கப்படும்.
5
எத்தியோப்பியா, பூத், லீதியா, அரேபியா, லிபியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும், உடன்படிக்கை நாட்டின் மக்களும் எகிப்தியரோடுகூட வாளினால் சாவார்கள்.
6
“ ‘யெகோவா கூறுவது இதுவே, “ ‘எகிப்தின் நட்பு நாடுகளும் விழும். அவளுடைய பெருமையான பெலன் குன்றிப்போகும். அவர்கள், மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரையும் வாளினால் அவர்களுக்குள் வெட்டுண்டு கிடப்பார்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
7
அவர்கள், பாழடைந்த நாடுகளுக்குள் பாழாய்ப் போவார்கள். அழிந்துபோன பட்டணங்களுக்குள், அவர்களுடைய பட்டணங்களும் அழிக்கப்படும்.
8
நான் எகிப்திற்கு நெருப்பு வைக்கும்போதும், அதன் உதவியாளர்கள் நசுக்கப்படும்போதும் நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
9
“ ‘அந்த நாளிலே பொய்யின்பம் கொண்டுள்ள எத்தியோப்பியரை அச்சுறுத்துவதற்காக என்னிடமிருந்து தூதுவர்கள் கப்பல்களில் போவார்கள். எகிப்து அழியும் நாளிலே, வேதனை அவர்களைப் பிடித்துக்கொள்ளும். நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options