1 நாளாகமம் 8:6-27
6
ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்:
7
நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான்.
8
சகராயீம் தனது மனைவிகளான ஊசிம், பாராள் என்பவர்களை விவாகரத்துச் செய்தபின் மோவாப் நாட்டிலே அவனுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
9
அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம்,
10
எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள்.
11
அவனுடைய மனைவி ஊசிம் மூலம் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12
எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான்.
13
எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர்.
14
அகியோ, சாஷாக், எரேமோத்
15
செபதியா, அராத், ஏதேர்,
16
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
17
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18
இஸ்மெராயி, இஸ்லியா, யோவாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
19
யாக்கீம், சிக்ரி, சப்தி
20
எலியேனாய், சில்தாய், எலியேல்,
21
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள்.
22
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23
அப்தோன், சிக்ரி, ஆனான்,
24
அனனியா, ஏலாம், அந்தோதியா,
25
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
26
சம்செராய், செகரியா, அத்தாலியா,
27
யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள்.
Settings