1 நாளாகமம் 4:9-20
9
யாபேஸ் தனது சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய், “நான் இவனை வேதனையுடன் பெற்றேன்” என்று சொல்லி யாபேஸ் என்ற பெயரை வைத்தாள்.
10
யாபேஸ் இஸ்ரயேலின் இறைவனிடம் கதறி அழுது, “நீர் என்னை ஆசீர்வதியும், எனது எல்லையையும் விரிவுபடுத்தும்! உமது கரம் என்னோடிருந்து தீமையிலிருந்து காப்பாற்றட்டும். அப்போது எனது வேதனை நீங்கும்” என வேண்டிக்கொண்டான். இறைவன் அவன் வேண்டுதலுக்குப் பதில் கொடுத்தார்.
11
சூகாவின் சகோதரன் கேலூப் என்பவன் மேகீரின் தகப்பன்; மேகீர் எஸ்தோனின் தகப்பன்.
12
எஸ்தோன் பெத்ராபாவுக்கும், பசேயாவுக்கும், இர்நாகாஷ் பட்டணத்தின் தலைவனாகிய தெகினாவுக்கும் தகப்பன். இவர்கள் ரேகா ஊரைச் சேர்ந்தவர்கள்.
13
கேனாசின் மகன்கள்: ஒத்னியேல், செராயா. ஒத்னியேலின் மகன்கள்: ஆத்தாத், மெயோனத்தாய்.
14
மெயோனத்தாய் ஒப்ராவின் தகப்பன். செராயா கராஷிம் பள்ளத்தாக்கின் தலைவனான யோவாபின் தகப்பன். அங்குள்ள மக்கள் கைவினைஞராய் இருந்தபடியால் அது கராஷிம் என்று அழைக்கப்பட்டது.
15
எப்புன்னேயின் மகன் காலேபின் மகன்கள்: ஈரு, ஏலா, நாகாம். ஏலாவின் மகன்: கேனாஸ்.
16
எகலெலேலின் மகன்கள்: சீப், சீப்பா, திரியா, அசாரேயேல் என்பவர்கள்.
17
எஸ்றாவின் மகன்கள்: யெத்தெர், மேரேத், ஏப்பேர், யாலோன். மேரேத்தின் மனைவிகளில் ஒருத்தி மிரியாம், சம்மாயியையும், எஸ்தெமோவாவின் தகப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
18
அவனுடைய யூத மனைவி, கேதோரின் தகப்பன் யாரேத்தையும், சோக்கோவின் தகப்பன் ஏபேரையும், சனோவாவின் தகப்பன் எக்குத்தியேலையும் பெற்றாள். இவர்கள் மேரேத் திருமணம் செய்திருந்த பார்வோனின் மகள் பித்தையாளின் பிள்ளைகள்.
19
நாகாமின் சகோதரியான ஒதியாவின் மனைவியின் மகன்கள்: கர்மியனான கேயிலாவின் தகப்பனும், மாகாத்தியனான எஸ்தெமோவாவின் தகப்பனும்.
20
ஷீமோனின் மகன்கள்: அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன். இஷியின் சந்ததிகள்: சோகேது, பென்சோகேது.
Settings