1 நாளாகமம் 4:1-8
1
யூதாவின் சந்ததிகள்: பேரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
2
சோபாலின் மகன் ராயா என்பவன் யாகாத்தின் தகப்பன்; யாகாத், அகுமாய், லாகாத் என்பவர்களின் தகப்பன். இவர்கள் சோராத்தியரின் வம்சங்கள்.
3
ஏத்தாமின் மகன்கள்: யெஸ்ரியேல், இஸ்மா, இத்பாஸ் என்பவர்கள். இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி.
4
பெனுயேல் கேதோரின் தகப்பன்; எசேர் உஷாவின் தகப்பன். இவர்களே பெத்லெகேமின் தலைவனான எப்ராத்தாவின் முதற்பேறானவனான ஊரின் சந்ததிகள்.
5
தெக்கோவாவின் தகப்பன் அசூர் என்பவனுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவிகள் இருந்தார்கள்.
6
நாராள் அவனுக்கு அகுசாம், ஏப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகியோரைப் பெற்றாள்; இவர்கள் நாராளின் சந்ததிகள்.
7
ஏலாளின் மகன்கள்: சேரேத், சோகார், எத்னான்,
8
கோஸ் என்பவர்கள். கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாவையும், ஆருமின் மகன் அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
Settings