உள்ளடக்கத்திற்குச் செல்க

Witness பற்றிய பைபிள் வசனங்கள்: Two necessary to establish a fact

8 வசனங்கள் · 10 அம்சங்கள்

Two necessary to establish a fact பற்றிய வசனங்கள்

  1. “ ‘ஒருவனைக் கொல்லும் எவனும், சாட்சிகள் கூறும் வாக்குமூலத்தின்படி மட்டுமே கொலைகாரனாகத் தீர்க்கப்பட்டுக் கொல்லப்படவேண்டும். ஆனாலும் ஒரேயொரு சாட்சியின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஒருவனும் கொல்லப்படக்கூடாது.

  2. இரண்டு அல்லது மூன்றுபேரின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே ஒருவன் கொல்லப்படவேண்டும். ஒரே சாட்சியின் அடிப்படையில் ஒருவனும் கொல்லப்படக்கூடாது.

  3. ஒருவன் ஏதாவது குற்றத்தையோ, மீறுதலையோ செய்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவனைக் குற்றவாளி என தீர்ப்பதற்கு ஒரு சாட்சி போதாது. ஒரு காரியம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்.

  4. ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ.

  5. இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது.

  6. இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகிறேன். எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும் என்று, வேதவசனம் சொல்கிறது.

  7. ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே.

  8. மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்த எவரும், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தினாலே இரக்கம் காட்டப்படாமல் மரித்தார்கள்.