Waiting Upon God பற்றிய பைபிள் வசனங்கள்: Illustrated
Illustrated பற்றிய வசனங்கள்
அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை, அவரையே நோக்கிப்பார்க்கின்றன.
திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான்.