உள்ளடக்கத்திற்குச் செல்க

Treasure-Houses பற்றிய பைபிள் வசனங்கள்: Priests and Levites in charge of

12 வசனங்கள் · 9 அம்சங்கள்

Priests and Levites in charge of பற்றிய வசனங்கள்

  1. ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

  2. அவர்களுடைய உடனொத்த லேவியர்கள் இறைவனின் ஆலயத்திலிருந்த திரவியக் களஞ்சியங்களுக்கும், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்கும் பொறுப்பாயிருந்தனர்.

  3. லாதான் கெர்சோனியரின் சந்ததிகளில் ஒருவன். கெர்சோனியனான லாதானைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் யெகியேலியும்,

  4. யெகியேலியின் மகன்களான சேத்தாமும், அவன் சகோதரன் யோயேலுமே. அவர்கள் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.

  5. மேலும் அம்ராமியர், இத்சாரியர், எப்ரோனியர், ஊசியேலியரிலிருந்து பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள்:

  6. மோசேயின் மகன் கெர்சோமின் வழித்தோன்றலில் வந்த செபுயேல் என்பவன் திரவிய களஞ்சியங்களுக்குப் பொறுப்பதிகாரியாயிருந்தான்.

  7. எலியேசர் மூலமாய் அவனுக்கிருந்த உறவினர்கள்: எலியேசரின் மகன் ரெகேபியா, அவனுடைய மகன் எஷாயா, அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் சிக்ரி, அவனுடைய மகன் செலோமித் என்பவர்கள்.

  8. செலோமித்தும், அவனுடைய உறவினர்களும் தாவீது அரசனால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். இவை குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆயிரம்பேரின் தளபதிகளினாலும், நூறுபேரின் தளபதிகளினாலும், மற்ற தளபதிகளினாலும் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் இருந்தன.

  9. இவர்கள் போர்க்களத்திலிருந்து கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் சிலவற்றை யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அர்ப்பணித்தார்கள்.

  10. இவ்வாறு தரிசனக்காரனான சாமுயேல், கீஷின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செருயாவின் மகன் யோவாப் ஆகியோரால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் மற்ற அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் செலோமித்தின் பராமரிப்பிலும் அவனுடைய உறவினர்களுடைய பராமரிப்பிலும் இருந்தன.

  11. அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர்.

  12. ஆசாரியனான செலேமியாவையும், வேதபாரகனான சாதோக்கையும், பெதாயா எனப் பெயரிடப்பட்டிருந்த லேவியனையும் களஞ்சிய அறைக்குப் பொறுப்பாக வைத்து, இவர்களுக்கு உதவியாளனாக ஆனானை நியமித்தேன். இவன் மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன். ஏனெனில் இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் சகோதரருடைய தேவைகளைப் பங்கிடுவதற்குப் பொறுப்பாயிருந்தார்கள்.