உள்ளடக்கத்திற்குச் செல்க

The Heathen பற்றிய பைபிள் வசனங்கள்: Employed to chastise the Church

5 வசனங்கள் · 37 அம்சங்கள்

Employed to chastise the Church பற்றிய வசனங்கள்

  1. “பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள், பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள். உங்களுக்குச் சொன்னாலும், உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை, உங்கள் நாட்களிலேயே நான் செய்யப்போகிறேன்.

  2. இரக்கமற்றவர்களும், மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை நான் எழுப்புகிறேன். அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி, பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள்.

  3. அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்; அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுகிறவர்கள். தங்கள் சொந்த மேன்மையை மாத்திரமே தேடுகிறவர்கள்.

  4. அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை, சாயங்காலத்தில் நடமாடும் ஓநாயிலும் பயங்கரமானவை. அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்; அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகிறார்கள். இரைமேல் பாயும் கழுகைப்போல, அவர்கள் வருகிறார்கள்;

  5. அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள். அவர்களுடைய படைகள், பாலைவனக் காற்றுப்போல் முன்னேறிச் சென்று, கைதிகளை மணலைப்போல வாரிச் சேர்த்துக்கொள்வார்கள்.