உள்ளடக்கத்திற்குச் செல்க

The Covenant பற்றிய பைபிள் வசனங்கள்: Blessings connected with

7 வசனங்கள் · 24 அம்சங்கள்

"The Covenant" என்பதைத் தேடு

Blessings connected with பற்றிய வசனங்கள்

  1. யெகோவா சொல்வது இதுவே: “எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து, எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,

  2. என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும், மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த ஒரு பெயரையும் கொடுப்பேன். ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.

  3. யெகோவாவை அண்டியிருந்து, அவருக்கு ஊழியம் செய்து, யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும், ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல் அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:

  4. நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன். அவர்களின் தகனபலிகளும், மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும்.

  5. அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.

  6. இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, அல்லது தன் சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்.

  7. நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”