உள்ளடக்கத்திற்குச் செல்க

Stars பற்றிய பைபிள் வசனங்கள்: Created by God

7 வசனங்கள் · 12 அம்சங்கள்

Created by God பற்றிய வசனங்கள்

  1. பகலை ஆளுவதற்குப் பெரிய சுடரும், இரவை ஆளுவதற்குச் சிறிய சுடருமாக, இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார். அவர் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

  2. அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது.

  3. உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,

  4. யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.

  5. அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  6. இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  7. அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும், பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே; கடலின் தண்ணீரை அழைத்து, பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே, “யெகோவா” என்பது அவர் பெயர்.