Shepherds பற்றிய பைபிள் வசனங்கள்: Seeking out good pasture for them
Seeking out good pasture for them பற்றிய வசனங்கள்
அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலைத் தேடி கேதோரின் எல்லையான பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிக்குச் சென்றனர்.
அங்கே அவர்கள் மிகச் செழிப்பான மேய்ச்சலுக்குரிய இடத்தைக் கண்டனர். அந்த நிலம் விசாலமானதும், சமாதானமும் அமைதியுமுடையதுமாக இருந்தது. அங்கே காமியர் சிலர் முற்காலத்தில் வாழ்ந்திருந்தனர்.
மேற்கூறப்பட்ட பெயர்களையுடைய இவர்கள், யூதாவில் எசேக்கியா அரசன் ஆட்சி செய்த காலத்தில் அங்கு வந்தார்கள். அவர்கள் அங்கு குடியிருந்த காமியர்களை அவர்களுடைய இடங்களில் தாக்கி, மெயூனியரையும் இன்றுவரை இருப்பதுபோல் முழுவதும் அழித்துவிட்டார்கள். பின்பு அவர்கள் அங்கே தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு உகந்த வளமான இடம் இருந்ததினால் குடியேறினர்.
அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.