உள்ளடக்கத்திற்குச் செல்க

Firstborn பற்றிய பைபிள் வசனங்கள்: Of man and beast, reserved to Himself by God

16 வசனங்கள் · 5 அம்சங்கள்

Of man and beast, reserved to Himself by God பற்றிய வசனங்கள்

  1. யெகோவாவுக்கு நீங்கள் ஒவ்வொரு கர்ப்பத்தின் முதற்பிறப்புகளை கொடுக்கவேண்டும். உங்கள் கால்நடைகளில் ஆண் தலையீற்றுகளெல்லாம் யெகோவாவுக்கு உரியவை.

  2. கழுதையின் தலையீற்றுகளையெல்லாம் ஒரு செம்மறியாட்டுக் குட்டியால் மீட்டுக்கொள்ள வேண்டும்; மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறித்துப்போடுங்கள். உங்கள் மகன்களில் முதற்பேறானவனை மீட்டுக்கொள்ள வேண்டும்.

  3. “இனிவரும் காலத்தில் உங்கள் மகன்கள் உங்களிடம், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்கும்போது அவர்களிடம், ‘யெகோவா தமது பலத்த கரத்தினால் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார்.

  4. பார்வோன் எங்களைப் போகவிடாமல் பிடிவாதமாய் மறுத்தபோது, யெகோவா எகிப்திலுள்ள மனிதருடைய ஒவ்வொரு முதற்பேறானதையும், மிருகத்தினுடைய ஒவ்வொரு தலையீற்றையும் கொன்றுபோட்டார். அதனால்தான் நாங்களும் ஒவ்வொரு கர்ப்பத்தின் தலையீற்றான ஆணையும் யெகோவாவுக்குப் பலியிட்டு, என் முதற்பேறான மகன்களை மீட்டுக்கொள்கிறோம்.’

  5. யெகோவா தமது பலத்த கரத்தினால் எங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதற்கு, இப்பண்டிகை உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றார்.

  6. “உங்கள் தானியக் களஞ்சியங்களிலிருந்தும், திராட்சை இரசத் தொட்டிகளிலிருந்தும் காணிக்கைகளைக் கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம். “உங்கள் மகன்களில் முதற்பேறானவனை நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டும்.

  7. நீங்கள் உங்கள் ஆடுமாடுகளிலிருந்தும் செம்மறியாடுகளிலிருந்தும் அப்படியே செய்யவேண்டும். அவை தங்களுடைய தாய்களுடன் ஏழுநாட்களுக்கு இருக்கட்டும். எட்டாம் நாளிலே அவற்றை எனக்குக் கொடுக்கவேண்டும்.

  8. “கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை.

  9. ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். “ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது.

  10. இஸ்ரயேலின் முதற்பேறான ஒவ்வொரு ஆணும் எனக்குரியவன். மனிதனின் முதற்பேறும், மிருகத்தின் தலையீற்றும் எனக்குரியவை. எகிப்தில் முதற்பேறானவற்றையெல்லாம் நான் அழித்தபோது, அவர்களை எனக்காக நான் வேறுபிரித்தேன்.

  11. எனவே நான் இஸ்ரயேலரின் முதற்பேறான எல்லா ஆண்களுக்கும் பதிலாக இப்பொழுது லேவியரை தெரிந்துகொண்டேன்.

  12. உங்கள் ஆட்டு மந்தைகளிலும் மாட்டு மந்தைகளிலும் ஆண் தலையீற்றுகளை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக வேறுபிரித்து வையுங்கள். உங்கள் மாட்டின் தலையீற்றை வேலைக்கு பயன்படுத்த வேண்டாம். செம்மறியாட்டின் தலையீற்றின் மயிரைக் கத்தரிக்கவும்வேண்டாம்.

  13. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வருடந்தோறும் உங்கள் இறைவனாகிய யெகோவா தமக்கென்று தெரிந்தெடுக்கும் இடத்தில் அவருக்கு முன்பாக அவற்றைச் சாப்பிடுங்கள்.

  14. ஆனால் ஒரு மிருகம் குறைபாடுள்ளதாகவோ, முடமாகவோ, குருடாகவோ கடுஞ் சேதமுற்றதாகவோ இருந்தால், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பலியிடாதீர்கள்.

  15. நீங்கள் அப்படிப்பட்டவைகளை உங்கள் பட்டணங்களிலேயே சாப்பிடவேண்டும். சம்பிரதாயப்படி அசுத்தமானவர்களும் சுத்தமானவர்களும், வெளிமானையோ கலைமானையோ சாப்பிடுவதுபோல் அவற்றைச் சாப்பிடலாம்.

  16. ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல தரையில் ஊற்றவேண்டும்.