Birds பற்றிய பைபிள் வசனங்கள்: What species were unclean
What species were unclean பற்றிய வசனங்கள்
“ ‘பறவைகளில் நீங்கள் அருவருக்கவேண்டியதும், அருவருப்பாய் இருப்பதால் சாப்பிடாமல் தவிர்க்கவேண்டியதும் இவையே: கழுகு, கருடன், கடலூராஞ்சி,
செம்பருந்து எல்லாவித வல்லூறுகள்,
எல்லாவித அண்டங்காக்கைகள்,
கொம்பு ஆந்தை, அலறும் ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள்,
சின்ன ஆந்தை, நீர்க்காகம், பெரிய ஆந்தை,
வெள்ளை ஆந்தை, பாலைவன ஆந்தை, மீன்கொத்தும் பெரிய பறவை,
கொக்கு, எல்லாவித நாரைகள், புழுக்கொத்தி, வவ்வால் என்பனவாகும்.
“ ‘பறக்கும் பூச்சி வகைகளில் நான்கு கால்களால் நடக்கின்ற யாவும் உங்களுக்கு அருவருப்பானவை.
நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடக்கூடாத பறவைகளாவன: கழுகு, கருடன், கடலூராஞ்சி,
செம்பருந்து, கரும்பருந்து, எல்லாவித வல்லூறுகள்,
சகலவித அண்டங்காக்கைகள்,
தீக்கோழி, ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள்,
சிறு ஆந்தை, பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை,
பாலைவன ஆந்தை, கூழக்கடா, நீர்க்காகம்,
கொக்கு, எல்லாவித நாரை, புழுக்கொத்தி, வவ்வால் ஆகியனவாகும்.
பறக்கும் பூச்சி வகைகளில் யாவும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைச் சாப்பிடவேண்டாம்.