Skip to content

Arabians பற்றிய பைபிள் வசனங்கள்: Prophecies concerning

5 வசனங்கள் · 8 அம்சங்கள்

Prophecies concerning பற்றிய வசனங்கள்

  1. அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு: தெதானியரின் வணிகப் பயணிகள் கூட்டமே, அரேபியாவின் காடுகளில் முகாமிடுகிறவர்களே,

  2. தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்; தேமாவில் வசிப்பவர்களே, நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள்.

  3. அவர்கள் பட்டயங்களுக்கும், உருவிய பட்டயத்துக்கும், நாணேற்றிய வில்லுக்கும், போரின் உக்கிரத்துக்கும் பயந்தோடி வருகிறார்கள்.

  4. யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும்.

  5. வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின் போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார்.