Ancient Samaria பற்றிய பைபிள் வசனங்கள்: Idolatrous
Idolatrous பற்றிய வசனங்கள்
“ஒகோலாள் என்னுடையவளாக இருக்கும்போதே விபசாரம் செய்தாள். அவள் தன் காதலர்களான அசீரிய வீரர்கள்மேல் மோகங்கொண்டாள்.
அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ, அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ, அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”
சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும் துண்டுகளாய் நொறுக்கப்படும்; அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம் நெருப்பில் சுட்டெரிக்கப்படும்; அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன். அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால், பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.”