உள்ளடக்கத்திற்குச் செல்க

Afflicted Saints பற்றிய பைபிள் வசனங்கள்: Should praise God

11 வசனங்கள் · 31 அம்சங்கள்

Should praise God பற்றிய வசனங்கள்

  1. ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.

  2. யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.

  3. நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா?

  4. நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.

  5. நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன்.

  6. என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள்.

  7. என் இருதயம் உறுதியாயிருக்கிறது, இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் இசையமைத்துப் பாடுவேன்.

  8. நீர் என்னை அநேக கசப்பான துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும் என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்; பூமியின் ஆழங்களில் இருந்து நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர்.

  9. நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, மீண்டும் என்னைத் தேற்றுவீர்.

  10. என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; இஸ்ரயேலின் பரிசுத்தரே, யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன்.

  11. உம்மால் மீட்கப்பட்ட நான் உமக்குத் துதிபாடும்போது, என் உதடுகளும் கம்பீரித்து மகிழும்.