உள்ளடக்கத்திற்குச் செல்க

Jael

6 வசனங்கள் · 1 குடும்ப உறுப்பினர்

Jael பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஆயினும் சிசெரா கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்குள் ஓடினான். ஏனெனில் ஆத்சோரின் அரசன் யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வம்சத்துக்கும் சிநேகபூர்வமான உறவு இருந்தது.

  2. அப்பொழுது யாகேல் வெளியில் சென்று சிசெராவைச் சந்தித்து அவனிடம், “வாரும் ஐயா! என் கூடாரத்திற்குள் வாரும். பயப்படவேண்டாம்” என்றாள். எனவே அவன் கூடாரத்திற்குள் சென்றான். அப்பொழுது அவள் அவனை ஒரு போர்வையால் மூடிவிட்டாள்.

  3. ஆனால் ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான்.

  4. சிசெராவை துரத்திவந்த பாராக் அப்போது அங்கு வந்துசேர்ந்ததும், யாகேல் சென்று அவனைச் சந்தித்தாள். “வாரும் நீர் தேடும் மனிதனை உமக்குக் காட்டுகிறேன்” என்றாள். எனவே அவன் அவளுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவனுடைய நெற்றியில் கூடார முளை அடிக்கப்பட்டு, இறந்திருக்கக் கண்டான்.

  5. “ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும் வீதிகள் கைவிடப்பட்டிருந்தன. பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றார்கள்.

  6. “பெண்களுக்குள்ளே யாகேல் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள், கூடாரங்களில் வாழும் பெண்களுக்குள் கேனியனான ஏபேரின் மனைவி அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவள்.