Skip to content

Haggai

11 வசனங்கள்

Haggai பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.

  2. அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள்.

  3. பெர்சிய அரசன் தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம், ஆறாம் மாதம் முதலாம் நாள், இறைவாக்கினன் ஆகாய் மூலம் இறைவாக்கு வந்தது. அது செயல்தியேலின் மகன் யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும், யோசதாக்கின் மகனான தலைமை ஆசாரியன் யோசுவாவுக்கும் வந்த யெகோவாவின் வார்த்தை:

  4. அப்பொழுது இறைவாக்கினன் ஆகாய் மூலம் யெகோவாவின் வார்த்தை வந்தது.

  5. அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவா இறைவாக்கினன் ஆகாயை அனுப்பியதால், அவனுடைய செய்திகளுக்கும் கீழ்ப்படிந்தார்கள். மக்களோ யெகோவாவுக்குப் பயந்தார்கள்.

  6. அப்பொழுது யெகோவாவின் தூதுவனாகிய ஆகாய், யெகோவாவின் இந்தச் செய்தியை மக்களுக்குக் கொடுத்து, “நான் உங்களுடன் இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.

  7. ஏழாம் மாதம் இருபத்தோராம் நாள், யெகோவாவின் வார்த்தை ஆகாய் என்னும் இறைவாக்கினன் மூலமாக வந்தது.

  8. தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள், ஆகாய் என்னும் இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.

  9. அப்பொழுது ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் அசுத்தமான ஒருவன், இவற்றில் எதையாகிலும் தொட்டால், அது அசுத்தமாகுமா?” என்று கேட்டான். அதற்கு ஆசாரியர்கள், “ஆம், அசுத்தமாகும்” என்றார்கள்.

  10. அப்பொழுது ஆகாய் அவர்களிடம் சொன்னதாவது, “ ‘அப்படியே இந்த மக்களும், இந்த நாடு முழுவதும் என் பார்வையில் இருக்கிறார்கள்,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எதைச் செய்தாலும், அவர்கள் எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளதாய் இருக்கின்றன.

  11. அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: