Skip to content

Athaliah

15 வசனங்கள் · 8 குடும்ப உறுப்பினர்கள்

Athaliah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அகசியா அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். இஸ்ரயேலின் அரசன் உம்ரியின் பேத்தியான அத்தாலியாள் என்பவளே இவனது தாய்.

  2. யூதாவின் அரசன் அகசியாவின் தாய் அத்தாலியாள் தன் மகன் இறந்ததைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, முழு அரச குடும்பத்தினரையும் அழிக்கத் தொடங்கினாள்.

  3. ஆனால் அரசனான யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமான யோசேபாள், கொலைசெய்யப்படப்போகிற இளவரசர் மத்தியிலிருந்து அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். இதனால் அவன் கொல்லப்படவில்லை.

  4. அத்தாலியாள் நாட்டை ஆட்சிசெய்தபோது அவன் தாதியுடன் யெகோவாவின் ஆலயத்தில் ஆறு வருடங்களாக ஒளித்தபடியே இருந்தான்.

  5. காவலாளரும், மக்களும் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த மக்களிடம் சென்றாள்.

  6. அவள் பார்த்தபோது, அக்கால வழக்கப்படி அரசன் தூண் அருகில் நிற்பதைக் கண்டாள். அதிகாரிகளும், எக்காளம் ஊதுபவர்களும் அரசனுக்குப் பக்கத்தில் நின்றார்கள். நாட்டு மக்கள் யாவரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அத்தாலியாள் தன் அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள்.

  7. நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். பட்டணம் அமைதியாயிருந்தது. ஏனெனில் அத்தாலியாள் அரண்மனையில் வைத்து வாளினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள்.

  8. அகசியா அரசனானபோது இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள். அவள் உம்ரியின் பேத்தியாவாள்.

  9. அகசியாவின் தாய் அத்தாலியாள் தன் மகன் இறந்ததைக் கண்டபோது, அவள் யூதாவின் அரச குடும்பம் எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கினாள்.

  10. ஆனால் அரசனான யெகோராமின் மகள் யோசேபாள், கொலைசெய்யப்படவிருந்த இளவரசர்களிடமிருந்து அகசியாவின் மகன் யோவாஸை களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். ஏனெனில் யோசேபாள் அரசன் யோராமின் மகளும், ஆசாரியன் யோய்தாவின் மனைவியும், அகசியாவின் சகோதரியுமாவாள். அவள் அத்தாலியாளிடமிருந்து பிள்ளையை ஒளித்துவைத்தபடியினால் அத்தாலியாளால் பிள்ளையைக் கொலைசெய்ய முடியவில்லை.

  11. அத்தாலியாள் அரசாண்ட ஆறுவருஷமளவும், யோவாஸ் தொடர்ந்து அவர்களுடன் இறைவனின் ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.

  12. மக்கள் ஓடித் திரிகின்ற சத்தத்தையும் அரசனை வாழ்த்துகின்ற சத்தத்தையும் அத்தாலியாள் கேட்டாள். அப்போது அவள் யெகோவாவின் ஆலயத்திற்கு அவர்களிடம் வந்தாள்.

  13. அங்கே அவள், நுழைவாசலில் அரசனுடைய தூண் அருகே யோவாஸ் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். அத்துடன் அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனின் அருகே நின்றார்கள். நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எக்காளங்களை ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளுடன் துதிப்பதற்கு தலைமை தாங்கினார்கள். அப்பொழுது அத்தாலியாள் தனது அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள்.

  14. நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்; பட்டணம் அமைதியாயிருந்தது. ஏனெனில் அத்தாலியாள் வாளினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள்.

  15. அந்த கொடியவளான அத்தாலியாளின் மகன்கள் இறைவனின் ஆலயத்தை உடைத்து, யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் இருந்த பரிசுத்த பொருட்களைக்கூட பாகாலுக்குப் கொடுத்திருந்தார்கள்.