- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
தாவீதுடன் செய்த உடன்படிக்கையை எடுத்துரைத்தல்
சங்கீதம் 89:19-37
19
நீர் ஒருமுறை தரிசனத்தில், உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: “நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன்.
20
நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21
என் கரம் அவனைத் தாங்கும்; நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
22
பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.
23
நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.
24
என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; என் பெயரால் அவன் பலம் உயரும்.
25
நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன்.
26
அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான்.
27
நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.
28
நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29
நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.
30
“அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, என் நியமங்களைப் பின்பற்றாது போனால்,
31
என் விதிமுறைகளை மீறி, எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால்,
32
நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;
33
ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.
34
நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.
35
ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்:
36
அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்;
37
அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.”
Settings