நெகேமியா 11:20-24
20
மீதியான இஸ்ரயேலர் ஆசாரியருடனும், லேவியருடனும் தங்களுடைய முற்பிதாக்களின் சொத்துரிமை இடங்களில் யூதாவிலுள்ள எல்லா நகரங்களிலும் வாழ்ந்தார்கள்.
21
ஆலய பணியாட்கள் ஓபேல் குன்றில் வாழ்ந்தார்கள். சீகாவும் கிஸ்பாவும் இவர்களுக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
22
எருசலேமிலிருந்த லேவியருக்கு மேற்பார்வையாளனாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகன், பானி அசபியாவின் மகன், அசபியா மதனியாவின் மகன், மத்தனியா மீகாவின் மகன். ஊசி ஆசாபின் சந்ததிகளில் ஒருவன், ஆசாபின் சந்ததிகளே இறைவனுடைய ஆலய ஆராதனைக்குப் பொறுப்பான பாடகர்களாக இருந்தார்கள்.
23
இந்த பாடகர்கள் அரசனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்பட்டிருந்து, தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தினார்கள்.
24
யூதாவின் மகன் சேராவின் வழித்தோன்றலான மெஷெசாபெயேலின் மகன் பெத்தகியா, மக்களுடன் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களுக்கும் பொறுப்பான அரசனுடைய பிரதிநிதியாய் இருந்தான்.
Settings