நெகேமியா 11:15-19
15
லேவியரைச் சேர்ந்தவர்கள்: செமாயா அசூபின் மகன், அசூபு அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் அசபியாவின் மகன், அசபியா புன்னியின் மகன்.
16
இறைவனுடைய ஆலயத்தின் வெளிப்புற வேலைகளுக்கு லேவியர்களுக்குத் தலைவர்களான சபெதாயும், யோசபாத்தும் பொறுப்பாயிருந்தார்கள்.
17
மத்தனியா இவன் மீகாவின் மகன், மீகா சப்தியின் மகன், சப்தி ஆசாபின் மகன். இவன் துதி செலுத்துதலையும், மன்றாட்டையும் நடத்துவதற்குப் பொறுப்பாயிருந்தான். பக்பூக்கியா தனது உடன்வேலையாட்களுள் இரண்டாவது பொறுப்பாளனாயிருந்தான்; அப்தா இவன் சம்மூவாவின் மகன், சம்மூவா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்.
18
பரிசுத்த நகரத்தில் இருந்த மொத்த லேவியர்கள் இருநூற்று எண்பத்து நான்குபேர்.
19
வாசல் காவலர் யாரெனில்: வாசல்களில் காவல்காத்த அக்கூப், தல்மோன் ஆகியோருடன் அவர்கள் கூட்டாளிகளும் மொத்தம் நூற்று எழுபத்திரண்டுபேர்.
Settings