உள்ளடக்கத்திற்குச் செல்க

Zachariah பற்றிய பைபிள் வசனங்கள்: 1. Son of Jeroboam, and last of the house of Jehu

7 வசனங்கள் · 2 அம்சங்கள்

1. Son of Jeroboam, and last of the house of Jehu பற்றிய வசனங்கள்

  1. யெகோவா யெகூவிடம், “என்னுடைய பார்வையில் எனக்குப் பிரியமான செயல்களைச் சரியான முறைப்படி செய்திருக்கிறாய். அத்துடன் ஆகாபின் குடும்பத்திற்கு எதிராக நான் என் மனதில் திட்டமிட்ட எல்லாவற்றையுமே நீ சாதித்துவிட்டாய். ஆகையினால் நான்கு தலைமுறைகளுக்கு உனது சந்ததிகள் இஸ்ரயேலின் அரியணையில் இருப்பார்கள்” என்று கூறினார்.

  2. இதன்பின்பு யெரொபெயாம் இஸ்ரயேல் அரசர்களான தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுடைய மகனான சகரியா அவனுக்குப்பின் அரசனானான்.

  3. யூதாவின் அரசன் அசரியா அரசாட்சி செய்த முப்பத்தி எட்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகன் சகரியா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். அவன் ஆறு மாதங்கள் அங்கே அரசாண்டான்.

  4. இவன் தன் தந்தையர் செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள் வழிநடத்திய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவேயில்லை.

  5. யாபேசின் மகன் சல்லூம், சகரியாவுக்கு எதிராகச் சதி செய்தான். மக்களுக்கு முன்பாக அவனைத் தாக்கிக் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அரசனானான்.

  6. சகரியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகள் யாவும் இஸ்ரயேல் அரசரின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.

  7. “உன் சந்ததிகள் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் ஆளுவார்கள்” என்று யெகூவுக்கு யெகோவா கூறிய வார்த்தை இவ்வாறு நிறைவேறிற்று.