Vineyard பற்றிய பைபிள் வசனங்கள்: Of kings
Of kings பற்றிய வசனங்கள்
நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.
ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.
மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான்.