Skip to content

Uzziel பற்றிய பைபிள் வசனங்கள்

8 வசனங்கள் · 6 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் மகன்கள் ஆவர். கோகாத் 133 வருடங்கள் வாழ்ந்தான்.

  2. ஊசியேலின் மகன்கள்: மீசயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர்.

  3. பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களான மீசயேலையும், எல்சாபானையும் அழைத்து, “இங்கே வாருங்கள்; உங்கள் சகோதரர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே பரிசுத்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள்” என்றான்.

  4. பின்பு சிமியோனியரில் ஐந்நூறு பேரும், இஷியின் மகன்களான பெலத்தியா, நெயெரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் போய் சேயீர் மலைநாட்டைத் தாக்கினார்கள்.

  5. பேலாவின் மகன்கள்: எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

  6. ஏமானின் மகன்கள் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுயேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்தீர், மகாசியோத் ஆகியோர்.

  7. ஏமானின் சந்ததிகளிலிருந்து: யெகியேல், சிமேயி; எதுத்தூனின் சந்ததிகளிலிருந்து: செமாயா, ஊசியேல்.

  8. அடுத்துள்ள பகுதியை பொற்கொல்லர்களில் ஒருவனான அர்காயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தான்; அவனைத் தொடர்ந்து நறுமண தைலம் செய்பவர்களுள் ஒருவனான அனனியா திருத்த வேலைகளைச் செய்தான்; இவர்கள் எருசலேமின் அகலமான மதில்வரைக்கும் எருசலேமைப் புதுபித்தார்கள்.