Skip to content

Pedaiah பற்றிய பைபிள் வசனங்கள்

8 வசனங்கள் · 6 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. யோயாக்கீம் அரசனாக வந்தபோது இருபத்தைந்து வயதாக இருந்தான். இவன் எருசலேமில் பதினொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனது தாய் ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாவின் மகளான செபுதாள் என்பவள்.

  2. மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

  3. பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சிமேயி. செருபாபேலின் மகன்கள்: மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.

  4. எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;

  5. ஊசாயின் மகன் பாலால் வளைவிற்கு எதிரேயும், காவலரின் முற்றத்திற்கு அருகேயுள்ள உயர்ந்திருக்கும் அரண்மனையிலிருந்து வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் உள்ள திருத்த வேலையைச் செய்தான். அவனுக்கு பின்பு பாரோஷின் மகன் பெதாயாவும்,

  6. அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மரத்தாலான உயர்ந்த மேடையின்மேல் சட்ட ஆசிரியன் எஸ்றா ஏறி நின்றான். அவனருகில் வலப்பக்கத்தில் மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்கள் நின்றார்கள். இடப்பக்கத்தில் பெதாயா, மீசயேல், மல்கியா, ஆசூம், அஸ்பதனா, சகரியா, மெசுல்லாம் ஆகியோர் நின்றார்கள்.

  7. பென்யமீன் வழித்தோன்றலில் வந்த தலைவர்கள்: சல்லு மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் யோயேதின் மகன், யோயேது பெதாயாவின் மகன், பெதாயா கோலாயாவின் மகன், கோலாயா மாசெயாவின் மகன், மாசெயா இதியேலின் மகன், இதியேல் எஷாயாவின் மகன்,

  8. ஆசாரியனான செலேமியாவையும், வேதபாரகனான சாதோக்கையும், பெதாயா எனப் பெயரிடப்பட்டிருந்த லேவியனையும் களஞ்சிய அறைக்குப் பொறுப்பாக வைத்து, இவர்களுக்கு உதவியாளனாக ஆனானை நியமித்தேன். இவன் மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன். ஏனெனில் இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் சகோதரருடைய தேவைகளைப் பங்கிடுவதற்குப் பொறுப்பாயிருந்தார்கள்.