Skip to content

Beriah பற்றிய பைபிள் வசனங்கள்

8 வசனங்கள் · 4 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்; இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்; பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;

  2. பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்: ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும், மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.

  3. எப்பிராயீமின் சந்ததிகள்: சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, அவனுடைய மகன் தாகாத்,

  4. அவனுடைய மகன் சாபாத், அவனுடைய மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள்.

  5. ஆகையால் இவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காக அநேக நாட்கள் துக்கங்கொண்டாடினான். அவனுடைய உறவினர்கள் வந்து அவனை ஆறுதல்படுத்தினர்.

  6. பின்பு எப்பிராயீம் தனது மனைவியுடன் உறவுகொண்டதால், அவள் கருவுற்று அவனுக்கு வேறு ஒரு மகனைப் பெற்றாள். அந்தக் குடும்பத்தில் பெருந்துன்பம் ஏற்பட்டிருந்ததால் அவனுக்குப் பெரீயா என்று பெயரிட்டனர்.

  7. சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.

  8. இவர்களில் யாகாத் மூத்தவன்; சீசா இரண்டாம் மகன். ஆனால் எயூஷூக்கும், பெரீயாவுக்கும் அதிக மகன்கள் இல்லாதபடியினால் அவர்கள் ஒரே முற்பிதாவின் குடும்பமாகக் கணக்கிடப்பட்டு, ஒரே பொறுப்புகளும் வழங்கப்பட்டன.