சங்கீதம் 85:1-9
1
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட கோராகின் மகன்களின் சங்கீதம். யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர்.
2
நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர்.
3
நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர்.
4
எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும்.
5
நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ?
6
உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
8
யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்; ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும்.
9
அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால், அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும்.
Settings