Skip to content
நெகேமியா 12:1-21

நெகேமியா 12:1-21

1
செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
2
அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3
செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
4
இத்தோ, கிநேதோன், அபியா,
5
மியாமின், மாதியா, பில்கா,
6
செமாயா, யோயாரிப், யெதாயா,
7
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள்.
8
யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான்.
9
அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
10
யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா,
11
யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
12
யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா,
13
எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,
14
மல்லூக்கின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், செபனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு,
15
ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய்,
16
இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம்,
17
அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய்,
18
பில்கா குடும்பத்தைச் சேர்ந்த சம்மூவா, செமாயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான்,
19
யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி,
20
சல்லு குடும்பத்தைச் சேர்ந்த கல்லாய், ஆமோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஏபேர்,
21
இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options