Skip to content
லேவியராகமம் 27:30-33

தசமபாகம் பற்றிய சட்டம்

லேவியராகமம் 27:30-33
30
“ ‘மண்ணின் தானியமும், மரங்களின் பழங்களுமான நிலத்தின் எல்லா பலனிலும் பத்தில் ஒரு பங்கு யெகோவாவுக்குச் சொந்தமானது. இது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
31
யாராவது தனது பத்தில் ஒரு பங்கை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக்கொடுத்தே அதை மீட்கவேண்டும்.
32
மேய்ப்பனின் கோலின்கீழ் கடந்துபோகிற ஒவ்வொரு பத்தாவது மிருகமும், மாட்டு மந்தையிலிருந்தும், ஆட்டு மந்தையிலிருந்தும் எடுக்கப்படும் முழுமையான பத்தில் ஒரு பங்காக யெகோவாவுக்கு பரிசுத்தமாகும்.
33
அவன் கெட்டதிலிருந்து நல்லதைத் தெரிந்தெடுக்கவோ அல்லது பதிலீடு எதையும் செய்யவோ கூடாது. அப்படி அவன் பதிலீடு செய்தால், அந்த மிருகமும், பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமானதாகும். அவற்றை மீட்கமுடியாது’ ” என்றார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options