எரேமியா 8:4-8
4
“நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: “ ‘மனிதர்கள் விழுந்தால், அவர்கள் எழும்புவதில்லையோ? ஒருவன் வழிவிலகிப் போனால் மீண்டும் திரும்புவதில்லையோ?
5
அப்படியானால் ஏன் இந்த மக்கள் வழிவிலகிப் போய்விட்டார்கள்? எருசலேம் ஏன் எப்பொழுதுமே வழிவிலகிப்போகிறது? அவர்கள் வஞ்சகத்தைப் பற்றிக்கொண்டு திரும்பிவர மறுக்கிறார்கள்.
6
நான் மிகவும் கவனித்துக் கேட்டேன். ஆனால் அவர்கள் சரியானதைச் சொல்கிறதில்லை. “நான் என்ன செய்துவிட்டேன்!” என்று சொல்லி ஒருவனும் தனது கொடுமையிலிருந்து மனந்திரும்புகிறதில்லை. போர்க்களத்திற்குள் பாய்ந்து தாக்கும் குதிரையைப்போல், ஒவ்வொருவனும் தன்தன் சொந்த வழிகளிலேயே தொடர்ந்து போகிறான்.
7
ஆகாயத்து நாரைகூட, தனக்கு நியமிக்கப்பட்ட பருவகாலங்களை அறியும். புறாவும், நீளவால் குருவியும், பாடும் குருவியுங்கூட தாங்கள் இடம் பெயரும் காலத்தை அறியும். ஆனால் என் மக்களோ யெகோவாவின் நியமங்களை அறியாதிருக்கிறார்கள் என்று சொல்.
8
“ ‘எழுத்தாளனின் பொய்யான எழுதுகோல், உண்மையல்லாததைத் தவறாகக் கையாண்டிருக்கும்போது, “நாங்கள் ஞானிகள்; யெகோவாவின் சட்டம் எங்களிடம் இருக்கிறது” என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?
Settings