ஆதியாகமம் 10:11-24
11
அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.
12
நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
13
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
14
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
15
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
16
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
17
ஏவியர், அர்கீயர், சீனியர்,
18
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
19
கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.
20
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.
21
சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
22
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
23
ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
24
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
Settings