Skip to content
2 இராஜாக்கள் 14:23-25

2 இராஜாக்கள் 14:23-25

23
யூதாவின் அரசன் யோவாஸின் மகன் அமத்சியா அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், சமாரியாவில் யோவாஸ் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலின் அரசனாகப் பதவி ஏற்று நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான்.
24
இவன் யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள்ளாக்கிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையாகிலும் விட்டுத் திரும்பவில்லை.
25
இவனே இஸ்ரயேலின் எல்லைகளை ஆமாத்தின் எல்லையிலிருந்து அராபாக் கடல் வரைக்கும் திரும்பப் பெற்றுக் கொடுத்தான். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தம்முடைய அடியவனாகிய இறைவாக்கினன் யோனாவைக் கொண்டு பேசியபடியே இது நடந்தது. இந்த இறைவாக்கினன் யோனா காத் ஏபேரைச் சேர்ந்த அமித்தாயின் மகன்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.