1 இராஜாக்கள் 18:14-17
14
இப்போது என்னை என் எஜமானிடம் போய், ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று சொல்லச் சொல்கிறீரே. அவன் என்னைக் கொன்றுபோடுவான்” என்றான்.
15
அதற்கு எலியா, “நான் பணிசெய்யும் சேனைகளின் யெகோவா இருப்பது நிச்சயமெனில், ஆகாபின் சமுகத்தில் போய் நிற்பேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
16
அப்பொழுது ஒபதியா ஆகாபுக்குச் செய்தியைச் சொல்வதற்காகப்போனான். ஆகாப் அதைக்கேட்டு எலியாவைச் சந்திக்கப் போனான்.
17
அவன் எலியாவைக் கண்டபோது அவனைப் பார்த்து, “இஸ்ரயேலின் கலகக்காரனே, நீயா வந்திருக்கிறாய்” என்று கேட்டான்.
Settings