1 நாளாகமம் 7:14-19
14
மனாசேயின் சந்ததிகள்: அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.
15
மாகீர் உப்பீமியர், சுப்பீமியரின் சகோதரியாகிய மாக்காள் என்பவளை மணந்தான். மனாசேயின் இரண்டாம் மகன் செலொப்பியாத்; அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தனர்.
16
மாகீரின் மனைவி மாக்காள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள். அவனுடைய சகோதரன் சேரேஸ் என்று பெயரிடப்பட்டான். அவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம்.
17
ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
18
அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள்.
19
செமிதாவின் மகன்கள்: அகியான், செகெம், லிக்கி, அனியாம்.
Settings