சங்கீதம் 130
ஆழங்களிலிருந்து எழும் கூக்குரல் 1–2
1
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2
யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
மன்னிப்பே நம்பிக்கையின் அடித்தளம் 3–4
3
யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?
4
ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
தேவனுடைய வார்த்தைக்காகப் பொறுமையுடன் காத்திருத்தல் 5–6
5
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
6
விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
இஸ்ரயேலுக்கான நம்பிக்கையும் மீட்பும் 7–8
7
இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.
8
அவர்தாமே இஸ்ரயேலரை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Study note