உள்ளடக்கத்திற்குச் செல்க

The Feast of the Passover பற்றிய பைபிள் வசனங்கள்: Sacrifices during

6 வசனங்கள் · 43 அம்சங்கள்

"The Feast of the Passover" என்பதைத் தேடு

Sacrifices during பற்றிய வசனங்கள்

  1. நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள். இரண்டு இளங்காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையுமே அவ்வாறு தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவையாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  2. ஒவ்வொரு இளங்காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவ்வாறே செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவைச் செலுத்தவேண்டும்.

  3. ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுடனும் அவ்விதமே பத்தில் ஒரு எப்பா அளவான மாவைச் செலுத்தவேண்டும்.

  4. உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்குப் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  5. இவற்றை வழக்கமாக காலைத் தகன காணிக்கையுடன் இவைகளையும் செலுத்தவேண்டும்.

  6. இவ்விதமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான உணவை ஒவ்வொரு நாளும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்தவேண்டும். இதை வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய பானகாணிக்கையுடனும் இதையும் செலுத்தவேண்டும்.