Sacrifices பற்றிய பைபிள் வசனங்கள்: Required to be perfect and without blemish
Required to be perfect and without blemish பற்றிய வசனங்கள்
அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும்.
ஆனால் ஒரு மிருகம் குறைபாடுள்ளதாகவோ, முடமாகவோ, குருடாகவோ கடுஞ் சேதமுற்றதாகவோ இருந்தால், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பலியிடாதீர்கள்.
குறைபாடுடைய அல்லது பழுதுடைய மாட்டையோ, செம்மறியாட்டையோ உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம். ஏனெனில், அது அவருக்கு அருவருப்பாயிருக்கும்.
நீங்கள் குருடான மிருகங்களை பலிக்காகக் கொண்டு வருகிறீர்களே, அது தவறில்லையா? ஊனமானதும் நோயுற்றதுமான மிருகங்களைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உங்கள் ஆளுநருக்குக் கொடுத்துப் பாருங்கள். உங்களிடம் அவன் பிரியமாய் இருப்பானோ? அல்லது உங்களை அவன் ஏற்றுக்கொள்வானோ? என சேனைகளின் யெகோவா கேட்கிறார்.
“தன் மந்தையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடா இருக்கும்போது, யெகோவாவுக்கு அதை நேர்ந்தபின், குறைபாடுள்ள ஒரு மிருகத்தைப் பலியிட்டால், அவன் ஏமாற்றுக்காரன், சபிக்கப்பட்டவன்; ஏனெனில் நான் ஒரு பேரரசர், என் பெயர் நாடுகளுக்குள்ளே பயத்திற்குரியதாய் இருக்கவேண்டும்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.