உள்ளடக்கத்திற்குச் செல்க

Porters பற்றிய பைபிள் வசனங்கள்: Their posts were determined by lot

8 வசனங்கள் · 8 அம்சங்கள்

Their posts were determined by lot பற்றிய வசனங்கள்

  1. இவர்களும் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர் செய்ததுபோல, அரசன் தாவீது முன்பும், சாதோக்குக்கும், அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களுக்கும், லேவியருக்கும் முன்பாகத் தங்கள் பணிகளுக்காக சீட்டுப்போட்டார்கள். மூத்த சகோதரனின் குடும்பங்களும், இளைய சகோதரனின் குடும்பங்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டன.

  2. அவர்களுடைய குடும்பங்களுக்கேற்றவாறு இளைஞர், முதியவர் என்ற வேறுபாடின்றி, ஒவ்வொரு வாசலுக்குமென சீட்டுபோடப்பட்டது.

  3. கிழக்கு வாசலுக்குரிய சீட்டு செலேமியாவிற்கு விழுந்தது. வடக்கு வாசலுக்குரிய சீட்டு அவனுடைய மகனான சகரியாவிற்கு விழுந்தது. அவன் ஞானமுள்ள ஆலோசனை கூறுபவன்.

  4. தெற்கு வாசலுக்குரிய சீட்டு ஓபேத் ஏதோமிற்கும், பண்டகசாலைக்குரிய சீட்டு அவனுடைய மகன்களுக்கும் விழுந்தன.

  5. மேற்கு வாசலுக்குரிய சீட்டும், மேல்தெருவிலுள்ள சலேகேத் வாசலுக்குரிய சீட்டும் சுப்பீமுக்கும், ஓசாவுக்கும் விழுந்தன. வாசல் காவலர்களுக்குரிய இடங்கள் முறைப்படி அடுத்தடுத்து அமைந்திருந்தன.

  6. நாள்தோறும் கிழக்கில் ஆறு லேவியர்களும், வடக்கில் நான்கு லேவியர்களும், தெற்கில் நான்கு லேவியர்களும் இருந்தனர். களஞ்சியத்திற்கு ஒரே தடவையில் இரண்டு லேவியர்கள் இருந்தார்கள்.

  7. மேற்கில் இருந்த முற்றத்தின் வீதியில் நான்கு லேவியர்களும், முற்றத்திற்கு இரண்டு லேவியர்களும் நிறுத்தப்பட்டனர்.

  8. கோராகு, மெராரி ஆகியோரின் வழித்தோன்றல்களிலிருந்து வாசல் காவலர்களின் பிரிவுகள் இவையே.