Access to God பற்றிய பைபிள் வசனங்கள்: In his temple
In his temple பற்றிய வசனங்கள்
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?
நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், அதையே நான் தேடுகிறேன்: நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; அவை எனக்கு வழிகாட்டட்டும். நீர் குடியிருக்கும் இடமான உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும்.
உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம்.